ஏ.எம்.கீத் திருகோணமலை-
காணாமல் போனோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட தொடர் உண்ணாவிரதம், வேளையில்லா பட்டதாரிகளின் தொடர் உண்ணாவிரதமும் போராட்டங்களும், கையகப்படுத்தப்பட்டு விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் தொடர்பாக அரசாங்கத்தினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இன்று திருகோணமலையில் ஹர்த்ததல் ஒன்றுக்கு தமிழ் மக்கள் போரவையினால் அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஹர்த்தாலுக்கு தமது ஆதரவினை தெளிவுபடுத்தியிறுந்தனர். இன்று காலை முதல் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்கிய நிலையில் உத்தியோக்கினரது வரவு நல்ல நிலையில் இருந்தது போக்குவரத்தை பொறுத்தவரையில் தனியார் மற்றும் அரச பேரூந்துகள் இயங்கிய நிலையில் மக்களின் நடமாட்டம் மந்தமாகவே காணப்பட்டது.
மேலும் தமிழ் பாடசாலைகளைப் பொருத்தவரையில் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்பட்டதுடன் முஸ்லிம் மற்றும் சிங்கள பாடசாலைகளின் மாணவர்களின் வரவு சாதாரன நிலையில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.