நம் முன்னோர்கள் செய்த பணிகள், திட்டமிடல்களை நாம் இன்று செய்வதில்லை - அமீர் அலி

எச்.எம்.எம்.பர்ஸான்-
சுமார் இருநூறு அல்லது முன்னூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த நம் பெரியோர்கள் செய்த பணிகள், திட்டமிடல்களை நாம் இன்று செய்வதில்லை. அவர்களுக்கு அன்று எந்த தொழிநுட்ப வசதிகளோ தொடர்பாடல்களோ இல்லை. ஆனால், அவர்கள் நம் சமூகத்தின் எதிர்கால நலன்களைக் கருத்திற்கொண்டு பல்வேறுபட்ட பணிகளை, திட்டமிடல்களைச் செய்திருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் உலகத்தையே கைக்குள் வைத்துக்கொள்ளும் அளவுக்கான தொழிநுட்ப வசதிகள் நமக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், அவர்களோடு ஒப்பிடும் போது அவர்கள் எங்களை விடச்சிறந்தவர்கள் தான் என்று கூற வேண்டும் என இன்று 21.04.2017 ம் திகதி மஜ்மா நகர் றஹ்மா ஜும்ஆப் பள்ளிவாயலில் ஜும்ஆவின் பின் மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கூறுகையில்,

அவர்கள் அன்று ஒற்றுமையுடனும் தூரநோக்கு சிந்தனைகளோடும் செயற்பட்டதன் காரணத்தால் தான் இன்றைய சமூகத்துக்கு பொருந்தத்தக்க பல வேலைத்திட்டங்களைச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, பாடசாலைகள், பள்ளிவாயல்களின் உருவாக்கம் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்றைய காலத்தில் நம்மில் பலருக்கு முன்னோர்கள் செய்தது போன்ற மனோநிலை இல்லை. அற்ப விடயங்களுக்காக முரண்பட்டுக் கொண்டு சமூகத்துக்குச் செய்ய வேண்டிய பணிகளிலிருந்து தூரமாகிச் செல்கின்றனர்.

விரும்பியோ விரும்பாமலோ நம் சகோதர்களின் மத்தியிலுள்ள சில தவறுகளையும், திட்டமிடலின்மையையும் கூறியாகத்தான் வேண்டும். அவ்வாறு நான் கூறுகின்ற போது, என்னைப் பலரும் தவறாக விமர்சிக்கலாம். இதற்காக நான் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், எனக்கு இரட்டை வேடம் என்பதெல்லாம் தெரியாது.

எதுவாக இருந்தாலும் நான் நேருக்கு நேரே பேசுபவன். எனது பேச்சில் பிழைகள், தவறுகள் இருந்தால் நீங்கள் தைரியத்தோடு என்னிடம் சுட்டிக்காட்டுங்கள். அதனை நான் ஏற்றுக் கொள்வேன் என மக்கள் மத்தியில் பிரதியமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -