அமைச்சர்கள் வெளிநாடு செல்வதாயின் பிரதமரின் அனுமதி அவசியம் வேண்டுமென இன்று காலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
மேலும், அமைச்சர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் வரையறை விதிக்கப்பட்டுள்ளதோடு, வருடமொன்றுக்கு இரு தடவைகள் மாத்திரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கட்சியில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் இக்கூட்டம் இடம்பெற்றது.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -