கிழக்கு மாகாண சுற்றுலா சபையின் பணிப்பாளராக சர்ஜூன் அபூபக்கர் நியமனம்..!

கிழக்கு மாகாண சுற்றுலா சபையின் பணிப்பாளராக சர்ஜூன் அபூபக்கர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண சுற்றுலா மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் சுற்றுலா சபைக்கான பணிப்பாளருக்கான நியமனக் கடிதத்தை கொழும்பிலுள்ள முதலமைச்சர் காரியாலயத்தில் வைத்து இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் வழங்கி வைத்தார்.

நியமனம் வழங்கும் சந்தரப்பத்தில் சுற்றுலா சபையின் தலைவர் சந்திரா மொஹட்டி மற்றும் அவுஸ்திரேலியா முதலீட்டாளர் ஒருவரும் பங்கேற்றிருந்தார். இதற்கு முன்னர் வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளராகவும்,முன்னாள் பாராளுமன்ற விவகார அமைச்சரின் ஆலோசகராகவும்,மகளிர் மற்றும் சிறுவர் திறன் அபிவிருத்தி அமைச்சின் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளராகவும் மற்றும் சுகாதார பிரதியமைச்சரின் ஊடக செயலாளராகவும், சர்ஜூன் அபூபக்கர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் சுற்றுலா முகாமைத்துவத்துவம் தொடர்பில் அவுஸ்திரேலியாவில் உயர்கல்வியை நிறைவு செய்துள்ளதுடன் மறைந்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களினால் உயர்கல்விக்காக அவுஸ்திரேலியா அனுப்பி வைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -