ஹைதர் அலி-
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் கயாத்து முகம்மது முஹம்மது மர்சூக் என்பவருக்கு சொந்தமான தையல் கடை 2017.04.17ஆந்திகதி-திங்கட்கிழமை (இன்று) காலை தீக்கிரையாகியுள்ளது. இவர் மிக நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் தையல் கடை செய்து வருகிறார்.
இத் தீ விபத்தினால் சுமார் 250,000 (இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம்) ரூபா பெறுமதியான உடு துணி பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிசில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்கடை உரிமையாளர் மீராவேடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளரும், மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினருமாவார்.