புத்தாண்டு பாரம்பரியங்களுக்கேற்ப தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கண்டி ஸ்ரீ தலதாமாளிகையின் ஸ்ரீ நாத தேவாலய வளாகத்தில் இன்று (15) முற்பகல் இடம்பெற்றது.
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வில் இன்று முற்பகல் 11.04 மணி என்ற சுபநேரத்தில் சியாமோபாளி மஹாநிக்காயவின் அஸ்கிரிபீட மஹாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தேரரினால் ஜனாதிபதி அவர்களுக்கு தலைக்கு எண்ணெய் தேய்த்துவிடப்பட்டது.
சியாமோபாளி மஹாநிக்காயவின் மல்வத்தைபீட அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி அநுநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், சுகாதார போசனை சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன. பிரதி சபாநாயகர் திலகங்க சுமதிபால, மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்கநாயக்க, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, தியவதன நிலமே நிலங்க தேல ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.