மின்சார ஊழியர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தத்தில் பாதிப்பில்லை


க.கிஷாந்தன்-

லங்கை மின்சார சபை ஊழியர்கள் சிலர் 05.04.2017 அன்று சம்பள முறண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் மின் பாவனையாளர்களுக்கு பாரிய பாதிப்பு எதுவும் இல்லையென மின்சபை நிறைவேற்று அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நள்ளிரவு முதல் இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் தொழிற்சங்க வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிநுட்ப துறைச்சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனார். ஆனால் அவர்களில் பாதி பேர் 06.04.2017 அன்றைய தினம் வேலைக்கு சமுகமளித்துள்ளதாகவும் 06.04.2017 அன்றைய தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தவர்களுக்கு பதிலாக தற்காலிகவர்களை அப்பணியில் அமர்த்தியுள்ளதாகவும் இதனால் அவசர மின் துண்டிப்பு ஏற்படும் போது அப்பணியாளர்களை பயன்படுத்து உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மின்சாரம் தொடர்பான கடைமைகள் வழமை போலவே நடைபெற்றுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எனினும் இவ்வேலை நிறுத்தம் காரணமாக மின்சாரசபையுடன் தொடர்புடைய பல வேலைகள் ஸதம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -