சிங்கள பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (14) கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் புத்தாண்டு பாரம்பரியங்கள் இடம்பெற்றன.
ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன பிள்ளைகள் சத்துரிக்கா, தஹம், தரணி, மருமகன் திலின மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோருடன் இணைந்து சுபநேரத்தில் அடுப்பு நெருப்பு மூட்டிய ஜனாதிபதி அவர்கள், புத்தாண்டு சம்பிரதாயங்களில் ஈடுபட்டார்.
பணிகளைத் தொடங்கும் பாரம்பரியத்திற்கேற்ப ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் சிவப்பு சந்தன மரக்கன்று ஒன்றை ஜனாதிபதி அவர்கள் நட்டினார். அதன் பின்னர் கைவிசேட சம்பிரதாய நிகழ்விலும் கலந்து கொண்டார்.