றிஸ்கான் முகம்மட்-
வட்டியை ஒழிக்கும் நோக்கில் அதன் முதற்கட்டமாக சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட மக்தப் அத்- தகாபுல் வட்டியில்லா கடன் வங்கியின் நிருவாகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக 02/04/2017 இன்று லுஹர் தொழுகையை தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய ஏ.எம்.ஜெமீல் அவர்களால் நம்பிக்கயாளர் சபை கேற்போர் கூடத்தில் வைத்து வங்கியின் முக்கிய தேவையான மடிக்கணினி நிருவாகத்திடமும் அதன் முகாமையாளர் எம்.சீ.ஏ. பரீட்டிடமும் வழங்கிவைக்கப்பட்டது , மேலும் இவ் வங்கிக்கான தனது பங்களிப்பாக நன்கொடையாக ஒரு இலட்சம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இன் நிகழ்வில் சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபை தலைவர் YM.ஹனிபா மற்றும் நம்பிக்கயாளர் சபை செயலாளர் எம்.ஐ அப்துல் மஜீத் (ரோசன்), மக்தப் அத்- தகாபுல் வங்கியின் செயலாளர் குத்தூஸ் ஆசிரியர், வெல்கம் நிசார் ஹாஜியார், பேஸ் இமாம் ஆதம்வாவா மெளலவி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸின் சாய்ந்தமருது அமைப்பாளர் அல்ஹாஜ் AM.அன்வர்(ஹாஜியார்)
மற்றும் அதன் செயலாளர் ராசீக் மேலும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அமைச்சுக்கான தொடர்பாடல் அதிகாரியும், அதன் தலைவர் ஜெமீலின் செயலாளருமாகிய ஏ.எல்.ஜஹான் மற்றும் பல அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸின் முக்கிய பிரமுகர்களும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.