இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம்..!

பாறுக் ஷிஹான்-
லங்கையில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் 'அரச ஓய்வூதியம்' வழங்கி உதவவேண்டும் என தெரிவித்து இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம் ஒன்றை வவுனியாவை சேர்ந்த கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் ஆரம்பித்துள்ளார். இவரது பயணமானது கடந்த சனிக்கிழமை(8) காலை 10.00 மணிக்கு வவுனியா ஸ்ரீகந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகியது.

இந்நிலையில் வவுனியா ஊடாக கிளிநொச்சி சென்று அங்கிருந்து நேற்று மாலை யாழினை வந்தடைந்தார்.  இதன் போது அவர் மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணப் கழகத்திற்கும் 6 மணிக்கு நல்லூர் ஆலயத்தையும் வந்தடைந்தார். இவரை நண்பர்கள் மக்கள் உறவுகள் என்று ஆர்வத்துடன் வரவேற்றனர்.

பின்னர் இன்று அதிகாலை வல்வெட்டித்துறையில் இருந்து பண்டத்தரிப்பு வரை சென்று அங்கு இருந்து யாழ் நகர் ஊடாக கைதடி மற்றும் சங்குப்பிட்டியுடாக பூநகரி வரை சென்று அங்கு இருந்து மன்னார் முல்லைத்தீவு சென்று புத்தளம் மட்டக்களப்பு பொத்துவில் வெல்லவாய திருகோணமலை அம்பாந்தோட்டை காலி கொழும்பு வரை சென்றடைந்து தனது இலங்கையினை சுற்றிய சைக்கிள் பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.

இதன் பின்னர் இலங்கை ஒய்வூதிய திணைக்களத்திற்கு சென்று இலங்கையில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்ற அறிக்கை ஒன்றை கையளிக்க உள்ளதாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் தெரிவிக்கின்றார். இவரது இலங்கையினை சுற்றிய சைக்கிள் பயணத்தை 1515 கிலோ மீற்றர் தூரமாக காணப்படுகின்றது. 

மேலும் இப் பயணத்திற்காக இக்கலைஞர் தனது சைக்கிளை தனித்துவமாக வடிவமைத்துள்ளதுடன் தனியாக ஆரம்பித்துள்ள இவரது இப் பயணம் பலராலும் உன்னிப்பாக அவதானிக்கப் படுகிறது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -