மலர்ந்திருக்கும் ஹேவிளம்பி தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (18-04-2017) அமைச்சின் கேட்போர் கூடத்தில் கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜ பிள்ளை உட்பட அமைச்சின் சகல உத்தியோகஸ்தர்களும் கலந்துகொண்டு தங்களது சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டதோடு கடமைகளை இனிதே ஆரம்பித்தனர்.