நெசவுத்தொழிற்துறையை மேம்படுத்துவது தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் காத்தான்குடி பாலமுனையில் இடம்பெற்றது,
பாலமுனையில் மிகவும் பாரம்பரியமிக்க தொழிலான நெசவுத்தொழில் ஈடுபடுவோர் தற்போது பல்வேறு நடைமுறைச்சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் இந்தத் தொழிற்துறையை பாதுகாக்கும் நோக்கில் குறித்த தொழில்துறையில் ஈடுபடுவோரை கிழக்கு முதலமைச்சர் பாலமுனை அலிகார் வித்தியலாயத்தின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சர் இன்று சந்தித்தார்,
இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைபரப்புச் செயலாளருமான யூஎல்எம்என் முபீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்,
இதன் போது அங்கு கூடியிருந்த மக்கள் தமது பாரம்பரியத் தொழிலான நெசவுத் தொழிலில் தற்போது எதிர்நோக்கும் நடைமுறை பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர்,
நெசவுத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த கிழக்கு முதலமைச்சர் இந்த தொழிற்துறையில் நவீன உத்திகளை புகுத்தி நவீன நெசவு இயந்திரங்கள் மூலம் இதனை அபிவிருத்தி செய்யும் யோசனையொன்றையும் கிழக்கு முதலமைச்சர் இதன் போது எடுத்துரைத்தார்.
அத்துடன் நெசவத் தொழில் ஆர்வமுடைய இளைஞர்கள் யுவதிகளுக்கு பயிற்சிகளை அளிக்கும வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இதன் போது கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.