ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா போக்கு வரத்து பொலிஸாரால் தாக்கப்பட்ட ஒருவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் இன்று பகல் 12 மணியளவில் கிண்ணியா முனைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாக்கப்ட்டவர் கிண்ணியா பெரியாற்று முனையைச் சேர்ந்த முகம்மது கைஸர் வயது 30 என்பவராவார். இவர் தனியார் கம்பனியொன்றில் ஊழியராகக் கடமையாற்றி வருகின்றார்.
தனது வீட்டிலிருந்து வாகனமொன்றில் வேலைக்குச் செல்லுகின்ற வேளையில் இடையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில். எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராமல் வந்த போக்குவரத்து பொலிஸ் தன் மீது தாக்கியதாகத் தெரிவிதார்.
இதனை அடுத்து தாக்கப்பட்டவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். எனினும் கிண்ணியா பொலிஸார் குறித்த பொலிஸ் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தாக்குதலுக்குள்ளானவர் தெரிவித்தார்.