கடந்த மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் ஒரு குட்டி இளவரசனாக வலம் வந்தவர் அதாவுல்லாஹ். மாற்றுக் கட்சிக்காரர்கள் இதனால் மனதளவில் பொறாமை கொண்டிருந்ததனை மறுக்க முடியாது. இது அவர்களின் மேடை பேச்சுக்களிலும் வெளிப்பட்டிருந்தது. உதாரணமாக, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இன்றைய பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்கள் மருதமுனை கடற்கரையில் உரையாற்றும் போது " மகிந்த அதாவுல்லாவுக்கே அள்ளிக் கொடுத்தார் எங்களுக்கு ஒரு மயிரும் கிடைக்கவில்லை" என்றார்.
இவ்வாறான விடையங்களுக்குள் மறைந்திருந்த அந்தரங்கங்கள் தற்போது கசிய ஆரம்பித்துவிட்டது. மகிந்த ராஜபக்ஸ காலத்தில் நடந்த தேர்தல்களுக்கு தேர்தல் வேலைகளுக்காக மகிந்த கொடுக்கும் பணத்தில் இருந்து அதாவுல்லாஹ் ஐந்து சதமேனும் பெற்ற வரலாறு இல்லை. தனது வேட்பாளர்களைக் கூட மகிந்த கொடுக்கும் பணத்தினை வாங்க வேண்டாம் என உத்தரவிடுவார். இதனால் தான் தேர்தல் வெற்றியின் பிற்பாடு அதாவுல்லா கேட்கின்ற அமைச்சுப் பதவிகளுக்கு மேலாகவும், மாகாண சபையில் அதாவுல்லாஹ் விரல் நீட்டிய உதுமாலெப்பைக்கு அமைச்சையும் மகிந்த அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
நம்மளிண்ட மற்றைய மரக் கட்சிக்காரர் ஒவ்வொரு தேர்தலிலும் கோடிகளுக்குள்ள குந்திக்கிருந்த வரலாறு தற்போது பரவலாக பேசப்படுகின்றது. இப்போதாவது இந்த சமூகம் விளங்கிக் கொள்ளுமா? ஏன் மகிந்த அவர்களை கெளரவிக்கவில்லை /பொருட்படுத்தவில்லை என்பனை? ஜீரணிப்பது கொஞ்சம் கஸ்டமாகத்தான் இருக்கும் வாசகர்களே! ஆனால் இது தான் பொய்யின் நிழல் படா உண்மை.
ஹக்கீம் காங்கிரஸ் அணியினர் கடந்த தேர்தல் காலத்தில் மகிந்தவிடம் வாங்கியதை திருப்பிக் கொடுத்து மைத்திரி அணியிடம் முப்பது கோடி வாங்கியதென்பதும், பதினெட்டாவது திருத்தத்துக்கு வாகனம் வாங்கி வாக்களித்ததென்பதும் பின்னர் தலைவர் வந்து "கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுந்ததாகக் " கூறிய வரலாறும், சிறுபான்மை மக்களின் உரிமையைக்காக்க மாகாணசபையில் வந்த திவினெகும சட்ட மூலத்துக்கு முதல் இரு கிழமைகள் கோட்டலில் தூங்கிவிட்டு வந்து வாக்களித்ததும் முத்திரை குத்தப்பட்டு கட்சிக்காரர்களே கசியவிட்ட வரலாறு.
இப்படியெல்லாம் அரசியல் செய்தால் ஆட்சியாளன் அள்ளிக் கொடுப்பானா நண்பர்களே சிந்தியுங்கள்..! இது தர்மமாகுமா? எங்காவது அவர்கள் விசுவாசமாக நடந்துகொண்டார்களா?பெருந்தலைவர் அஷ்ரபின் பின்னர் அவர் பாசறையில் வளர்ந்ததால் என்னவோ இரண்டாம் அஷ்ரபாக கட்சியின் கொள்கை அபிவிருத்தி கெளரவமாக அரசியல் செய்தவர் அதாவுல்லா என்பது காலம் உணர்த்தும் உண்மை.
Shifaan Bm, மருதமுனை.