ஐ.பி.எல். தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் குஜராத்திற்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல். சீசன் 10-ன் 16-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 4 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.
மும்பை அணியில் டிம் சவுத்திற்குப் பதிலாக மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளார். குஜராத் அணியில் ஆரோன் பிஞ்சிற்குப் பதிலாக ஜேசன் ராயும், ஷடாப் ஜகதிற்குப் பதிலாக முனாப் பட்டேலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குஜராத் லயன்ஸ் அணி:-
1. மெக்கல்லம், 2. வெயின் ஸ்மித். 3. ஜேசன் ராய், 4. ரெய்னா, 5. தினேஷ் கார்த்திக், 6. இஷசான் கிஷான், 7. ஜடேஜா, 8. பிரவீண் குமார், 9. பாசில் தம்பி, 10. டை, 11. முனாப் பட்டேல்.
மும்பை இந்தியன்ஸ் அணி:-
1. பார்த்தீவ் பட்டேல், 2. பட்லர், 3. ரோகித் சர்மா, 4. ராணா, 5. பொல்லார்டு, 6. ஹர்திக் பாண்டியா, 7. குருணால் பாண்டியா, 8. ஹர்பஜன் சிங், 9. மெக்கிளெனகன், 10. மலிங்கா, 11. பும்ப்ரா.