எம்.ரீ. ஹைதர் அலி-
மக்களுக்கு நன்மையளிக்கும் வகையிலேயே உதவித்திட்டங்கள் அமைய வேண்டும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.
குறிப்பாக எங்களுடைய கடந்தகால 2015 ஆண்டுக்கான பன்முப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 25 இலட்சம் ரூபாய்களுக்கு அதிகமான நிதிகளை இத்தகைய வாழ்வாதாரம் சார்ந்த விடயங்களுக்காக ஒதுக்கியிருந்ததோடு அவ்வாறு எங்களால் வழங்கப்படும் அனைத்துவிதமான உதவிகளிலும் எத்தகைய இன, மத ரீதியிலான எதுவிதமான பாகுபாடுகளுமின்றி முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத்தில் உள்ளவர்களை உள்ளடக்கியதாக எமது உதவித்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து வறிய குடும்பத்தை சார்ந்த நபர்களுக்கு அவர்களின் சுய தொழிலினை மேம்படுத்தும் முகமாக துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...
எங்களுடைய நிதி ஒதுக்கீடுகளில் மக்களினுடைய சுயதொழில், வாழ்வாதாரம் சார்ந்த விடயங்களுக்கே அதிகமாக முன்னுரிமையளித்து செயற்பட்டு வருகின்றோம்.
மேலும் எதிர்வரும் காலங்களிலும் மக்களின் நலன்கருதி அவர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் பிரயோசனமிக்க இத்தகைய பல்வேறு உதவித்திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு நாங்கள் திட்டமிட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
எனவே இத்தகைய உதவித்திட்டங்களை பெற்றுக்கொண்டுள்ள பயனாளிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள இச்சிறிய உதவிகளை சிறந்த விதத்தில் பயன்படுத்தி தமது சுய தொழிலினை மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.
தங்களது சுய தொழிலினை மேம்படுத்துவதற்காக துவிச்சக்கர வண்டிகளை பெற்றுத்தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களிடம் சம்மந்தப்பட்ட நபர்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 13 பயனாளிகளுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.