ஏ.எம். கீத் திருகோணமலை-
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மாடுகள் தொடச்சியாக காணாமல் போவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட கிண்ணியா பொலிஸ் விஷேட புலனாய்பிரிவினர் நேற்று இரவு களவெடுத்த ஒரு மாட்டின் இறைச்சி 25 கிலோவை விற்ற குற்றத்திற்காக இடிமன்நகர் கிண்ணயா-3 இல் வசிக்கும் பிச்சைகுட்டி தௌபிக் (வயது 48) என்கின்ற ஊர்காவல் படை வீரரையும் அவ்விறைச்சி வாங்கிய குற்றத்திற்காக ஜாயா வீதி கிண்ணியா-3 இல் ஹோட்டல் உரிமையாளரான ரம்ழான் தௌபிக் (வயது 54) என்பவரையும் கைதுசெய்தனர்.கைது செய்ப்பட்ட ஊர்காவல் படை வீரர் இடிமன் காவல் நிலையத்தில் கடமையாற்றுவர் என குறிப்பிட்ட கிண்ணியா பொலிஸார் கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.