இறக்காம மாணிக்கமடு முஸ்லிம் காங்கிரஸின் கட்சி சொத்தல்ல..!

ம்­பாறை, இறக்­காமம் பிர­தேச பிரி­வுக்குட்­பட்ட மாணிக்­க­மடு பிர­தேசத்தில் சிலை விவகாரம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் தான் அதிகமாக போராடிவருகின்றன அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம், அக்கட்சியின் பிரதித் தலைவர் பிரதியமைச்சர் ஹரீஸ் பாராளமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள் போன்றவர்களை பாராட்ட எம் சமூகம் கடமை பட்டுளோம்.

இந்த பிரச்சினை தொடங்கிய ஆரம்பித்திலே உடனே அவ்விடத்துக்கு சென்ற முஸ்லிம் காங்கிரஸ் பாராளமன்ற உறுப்பினர் மன்சூர் , மாகாண அமைச்சர் நசீர் , மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன் ,தவம் கட்சி முக்கியஸ்தர்கள் போன்றோர் சென்று கலவரத்தை தடுத்தனர். 

பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் இவ் சம்பத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன அதன் பின் நீதிமன்ற தீர்ப்புக்கள் வரும்வரை யாரும் அத்துமீறி நுழைய கூடாது என தீர்ப்பு வழங்கப்பட்டது.

பின்னர் சட்டத்தை மதிக்காது ஞானசார தேரர் குழுவினர் அவ்விடத்துக்கு சென்று இவ்விடத்தில் பன்சாலை கட்டுவோம் என அவ்விடத்திலே இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பி மீண்டும் மாவட்ட அரசாங்க அதிபர், காணி ஆணையாளர் மற்றும் ஆகியோருடன் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து பன்சாலை கட்ட எங்களுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என வீர வசனம் பேசிவிட்டு கூட்டத்தையும் நடத்திவிட்டு சென்றுள்ளனர்.

அந்த கூட்டத்தின் பின் மக்கள் முஸ்லிம் மக்களுக்கும் ,இந்து மக்களும் பதட்டமும் ,ஆத்திரமும் அடைந்தனர். முஸ்லிம் காங்கிரஸினால் கடந்த வெள்ளி ஜும்மாவுக்கு பின் பௌத்தர்களற்ற இறக்காமத்தில் சிலைவைப்பு ,பன்சாலை அமைப்பதுக்கு எதிராக எதிர்ப்பு பேரணி அம்பாறை மாவட்டத்தில் பல முஸ்லிம் ஊர்களிலும் நடந்தன பின்னர் மகஜர் ஒன்று பிரதேச செயலாளரிடம் மக்களால் வழங்கப்பட்டன.

அத்தினத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மபந்தன் இருவரும் ஜனாதிபதியிடம் இப்பிரச்சினைகளை முன்வைத்தனர் பின்னர் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு தருவேன் என இரு தலைவர்களிடமும் ஜனாதிபதி உறுதிமொழியளித்தார்.

கடந்த வெள்ளியன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளமன்றத்தில் மிக காத்திரமாக உரையை நிகழ்த்தினார் அதாவது இலங்கையில் ஞானசார தேரருக்கு ஏதும் தனிச் சட்டம் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார் மாணிக்­க­மடு பிர­தேசத்தில் சிலையை ,உடனடியாக அகற்றி பன்சாலை கட்டுவதையும் நிறுத்தவேண்டும் இல்லையெனில் இந்த ஆட்சிக்கு எதிராகவும் சிறுபான்மை மக்கள் திரும்ப கூடும் என தைரியமாகவும் , பேசியுள்ளார்.

ஆனால் இன்று இந்த நல்லாட்சியில் உள்ள பலம் பொருந்திய முஸ்லிம் தலைவர்கள் , அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ,இராஜாங்க அமைச்சர் , பிரதியமைச்சர்கள் , பாராளமன்ற உறுப்பினர்கள் இது ஏதோ முஸ்லிம் காங்கிரஸின் கட்சி பிரச்சினை போல இன்று வாய்மூடி மௌனியாக பாராளமன்றத்தில் இருக்கின்றனர்.

இதற்கெல்லாம் பிரதான காரணம் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸை பலவீனப்படுத்த வேண்டும் இப்பிரச்சினையை முஸ்லிம் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது இதில் முஸ்லிம் காங்கிரஸ் தோல்வி கண்டால் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துவிடும் அதை பயன்படுத்தி தாங்கள் கட்சிகளை அம்பாறை மாவட்டத்தில் வளர்துக்கொள்ளலாம் பின்னர் பாராளமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கோடு கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் பல ஆயிரம் வாக்குகளை பெற்ற தலைவர்கள் சிந்திக்கின்றனர்.

சற்று சிந்தியுங்கள் இது முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சினையல்ல முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை அதற்காக எம் முஸ்லிம் கட்சி தலைவர்கள் ,அமைச்சர்கள் ,இராஜாங்க அமைச்சர்கள் , பிரதியமைச்சர்கள் , பாராளமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைகோருங்கள் இல்லையெனில் மீண்டும் கலவரம் உருவாகி உயிர் ,உடமை இருப்பிடத்தையும் எம் சமூகம் இழந்து நடுத்தெருவில் நிற்கும் என்பதை மனதில் வைத்து கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையாக செயற்பட்டால் மாத்திரமே இப்பிரச்சினைக்கு வெற்றிகிடைக்கும்.
ஸபா ரௌஸ் கரீம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -