மாகாண சபை அமர்வில் காணிப் பிரச்சினை தொடர்பான தனிநபர் பிரேரணை ஒன்றினை பொறியியலாளர் ஷிப்லி பாறுக் முன்மொழிகின்றார்.
கிழக்கு மாகாண சபையின் 76ஆவது அமர்வு எதிர்வரும் 2017.04.25ஆந்திகதி-செவ்வாய்கிழமை சபைத் தவிசாளர் கலப்பத்தி சந்திரதாச தலைமையில் நடைபெற்றவுள்ள நிலையில் வில்பத்து காணிப் பிரச்சினை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தனிநபர் பிரேரணை ஒன்றினை முன்வைத்து அன்றைய தினம் உரையாற்றவுள்ளார்.
அவர் 2017.04.11ஆந்திகதி-செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் கலப்பத்தி சந்திரதாச அவர்களுக்கு இது தொடர்பான அவசர பிரேரணை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அப்பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயமாக...
வில்பத்து பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களின் பூர்வீக காணிகள் உள்ளடங்கிய பகுதிகளை அவசர அவசரமாக வன விலங்குக்குரிய பிரதேசமாக வர்த்தமானியிடும் நடவடிக்கைகள் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கடந்த மகிந்த ராஜபக்ஸ அவர்களின் சர்வாதிகார அரசாங்கத்தில் கூட நடைபெறாத இத்தகைய விடயங்கள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தினூடாக நடைபெறுவது மிகவும் கவலைக்குரியதாகும்.
எனவே பொது மக்களினுடைய காணிகளை உள்ளடக்கியதாக அறிக்கையிடப்பட்டுள்ள வில்பத்து பிரதேசத்திற்குரிய வர்த்தமானி அறிவித்தல்களை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என இச்சபையில் முன்மொழிகின்றேன். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்