சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவையிடம் உள்ள ஊடக அனுமதி பத்திரத்தை கொள்வனவு செய்ய முயற்சிகள் இடம்பெற்று வருவதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சமகால அரசாங்கத்தின் பிரபல அமைச்சரினால் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொலைக்காட்சியுடன் தொடர்புடைய நபர்களுடன் பல சுற்று கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவரே அனுமதி பத்திரத்தை கொள்வனவு செய்வதற்கு தீவிர முயற்சியில் ஈடுப்பட்டிருப்பதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இந்த அனுமதி பத்திரத்தை விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதனை இரத்து செய்யாமல் இருப்பது அவசியமாகும்.
சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவை கடந்த அரசாங்கத்தின் போது அறிமுகம செய்யப்பட்டதாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களால் நடத்திச் செல்லப்பட்ட இந்த தொலைக்காட்சி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஆட்சியில் மோசடி செய்யப்பட்ட பெருந்தொகை பணம் இந்த நிறுவனத்தின் ஊடாக பண தூய்மையாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.