இஸ்லாமிய அழைப்பாளர் டொக்டர் ஸாகிர் நாயக் அவர்களுக்கு இந்திய விஷேட நீதிமன்றம் பிணை வழங்க முடியாத பிடியானை பிறப்பித்துள்ளது. முறைகேடான பணப்பறிமாற்றல்கள் தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பல தடவைகள் அழைப்பானைகள் வழங்கப்பட்டும் அவர் விசாரனைக்கு வரவில்லை என தேசிய புலனாய்வு ஆய்வகம் விஷேட விஷேட நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அவருக்கு எதிராக பிணையில் செல்லமுடியாத திறந்த பிடியாணை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Islamic Research Foundation என்ற நாயகின் அமைப்பு பண உதவிகளை பெற்றுக்கொண்டமை தொடர்பில் தொடர்ந்து விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு எதிராக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.