சப்னி அஹமட்-
ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ’குலைமுறிசல்’ நாவல் வெளியீட்டு விழா இன்று (23) ஒலுவில்அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பிறை எப்.எம் கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையும்தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூகசேவைகள், சிறுவர் நன்னடத்தை, கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர்அவர்களும் கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன்கலந்துகொண்டனார்.
இதன் போது அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்;
கவிஞர் வஹாப்டீன் பல சாதனைகளை புத்தகங்கள் ஊடகாக நிலைநாட்டி அவரின்எழுத்திற்கென ஓர் தனித்துவத்தை பேணி வருகின்றார். குறிப்பாக இவர் பல விதமானஎழுத்தாக்களை சமூகவியல் முறையில் கையாண்டுவருவதுடன் இவரின் முயற்சியையும்இவருது எழுத்துக்களையும் நாம் பாராட்ட வேண்டும் இவர் தனது எழுத்துக்கள் மூலம் பலவகையான துறையில் நிபுணத்துவம் பெற்று பல சாதனை விருதுகளையும் பெற்றமை எமக்குமிகுந்த சந்தோஷம் அழிக்கின்றது.
இலக்கியத்துறை என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் வாழ்வியலாக வரவேண்டியதுஅதை கடைபிடிப்பது ஒவ்வொருவருடையதும் கடமை அவ்வாறான இலக்கியத்துறை இன்றுசடுதியாக குறைந்த வண்ணம் உள்ளது அது போல் சில இடங்களில் மேலோங்கி தமிழ்இலக்கியத்துறை செல்கின்றது. ஆகவே, நாம் இலக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கவேண்டியது ஒவ்வொரு தமிழ் பேசும் மக்களின் உரிமையாக அதை கற்ற வேண்டியவழிமுறைகளில் நாம் கையாண்டு அதை கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
’இலக்கியத்துறைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வஹாப்டீன் போன்ற எழுத்தாளர்கள் தொடந்தும்திகழுவதுடன் இன்னும் பல சாதனைகளையும் நிலைநாட்ட வேண்டும், அத்துடன் இங்கு பலஇலக்கியத்துறையில் பல சாதனைகள் படைத்தவர்களை காண்பதில் அகம் மகிழ்கின்றேன்’என்றும் அங்கு தெரிவித்தார்.
இதன் போது, கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர், பொதுமக்கள் எனபலரும் கலந்துகொண்டு பிரதிகளையும் பெற்றுக்கொண்டனர்.