பூர்வீக நிலங்களை இழந்து தவிப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - #MAYDAY

தொழிலாளர் வர்க்கத்தினரின் நல உரிமைகளுக்காகப் போராடும் இன்றைய நாளில் வடக்கு கிழக்கில் வாழ்வுரிமைகளையும் பூர்வீக நிலங்களையும் பறி கொடுத்து வீதிகளிலே தவிக்கும் அப்பாவி மக்களின் விடிவுக்கு வழி கிடைக்க ஒருமித்து குரல் எழுப்புதுவது அனைவரதும் கடமையாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மே தினத்தையெட்டி அவர் விடுத்திருக்கும் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,

மே தினம் என்பது வெறுமனே அரசியல் கட்சிகளினதும் தொழிலாளர் அமைப்புகளினதும் ஜனரஞ்சக நிகழ்வாக உருமாறிவிட்ட இந்தக் காலத்தில், மக்களின் இழந்த உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் ஓர் உன்னத நாளாக இது மாற வேண்டும்.

அதிகாரத்தை தம்வசம் வைத்திருந்து கோலோச்சும் கட்சிகள் இந்த விடயத்தில் கரிசனை கொள்ள வேண்டும். இழந்த உரிமைகளுக்காக போராட்டம் நடத்திவரும் மக்களின் குரல்களுக்கு செவிசாய்ப்பதே கட்சிகளின் தார்மீக கடமையாகும்.

”யாருடைய கூட்டத்திற்கு அதிகமாக மக்கள் வந்தார்கள்? எந்தக் கட்சியின் கூட்டம் சனத்திரள் மிகுந்ததாக இருந்தது? யாருக்கு செல்வாக்கு அதிகரித்து இருந்தது? என்பதை எல்லாம் கணக்கெடுக்கும் நிகழ்வாக இல்லாமல் மக்களின் மனங்களை வென்றெடுக்கும் நாளாக அமையட்டும்.

நல்லாட்சியை உருவாக்குவதில் சிறுபான்மை மக்களின் பங்கு மகத்தானது. ஆட்சி மாற்றத்தின் நோக்கம் அவர்களுக்கு சரிவர கிடைக்க செய்யும் ஒரு திருப்ப நாளாக இந்த உன்னத நாள் மாறட்டும்.

தொழிலாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்ள தலை நகரவீதிகளில் மக்கள் பேரணி நடாத்தப்படுகின்றது. ஆனால் வடக்கு, கிழக்கில் வாழ்வுரிமைகளையே தொலைத்துவிட்டு, நிர்க்கதியான அப்பாவி ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் வீதிகளிலே நாட்கணக்கில் கொடூர வெயிலில் தாம் இழந்த உரிமைகளை பெற்றுக்கொள்ள தவியாய்த் தவிக்கிறார்கள்.

இந்த மே தினம் இவர்களுக்கு நிம்மதி கிடைக்க அடிகோல வேண்டும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -