இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் - மாணவர்கள் உற்சாகம்

லங்கையின் முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் கொழும்பு, நகர மண்டப பகுதியில் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு நகரத்தை ஸ்மார்ட் நகரமாக்கும் நோக்கில் மொபிடெல் நிறுவனத்தினால் இந்த நடவடிக்கை முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அதிவேக இணையத்தளவசதி மற்றும் இயந்திரத்தின் ஊடாக குளிர் பானங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி இதில் காணப்படுகின்றது. அத்துடன், அருகில் உள்ள பேருந்துகள், ரயில் நிலையங்கள், வங்கிகள் தொடர்பில் முழு விபரங்களையும் அறியக்கூடியவாறு குறித்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த ஸ்மார்ட் பேருந்து நிலையத்திற்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அதிகளவிலானோர் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதன்முதலாக கொழும்பில் இந்த ஸ்மார்ட் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டமையானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -