வில்பத்து விவகாரம் : முஸ்லிம் MPக்கள் ஒரே மேசையில் (படங்கள்)

அஷ்ரப். ஏ. சமத்-
தேசிய சூறா ஹவுன்சிலின் ஏற்பாட்டில் நேற்று (5) இரவு மருதானை அல் - ஷபாப் மண்டபத்தில் அன்மைய வில்பத்து வனவளப் முசலிப் பிரதேசத்தில் முஸ்லீம் தமிழ் மக்களது வயல் காணி நிலங்களும் வர்த்தமானி அறிவித்தலினால் அப்பிரதேச வாழ் மக்கள் பாரிய பிரச்சினையை எதிா்நோக்குகின்றனா். இப்பிரச்சினையை எவ்வாறு அரசியல் மட்டத்தில் கையாழ்வது பற்றி முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பிணா்கள் சட்டத்தரணிகள், புத்திஜீவிகள் கொண்ட கலந்துரையாடல் தேசிய சூறா சபையின் தலைவா் தாரிக் மஹூமுத் தலைமையில் நடைபெற்றது. 

இப்பிரச்சினை சம்பந்தாக காலாநிதி ஹஸ்புல்லாஹ் வில்பத்து முசலி பிரசேத வாழ் மக்களது சரித்திரம் அடங்கிய சரியான தகவல்கள் விளக்கிக் கூறினாா். 

இந் நிகழ்வில் அமைச்சா் றிசாத் பதியுத்தீன், இராஜாங்க அமைச்சா் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சகளான எச்.எம். ஹரீஸ், அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பிணா்களான, அலி சாகீர் மொலாளானா, எம். எச். சல்மான், எம்.எச்.எம் நவவி, முஜிபு ரஹ்மான், இஸாக் ரஹ்மான், ஆகியோறும் சட்டத்தரணி ஜாவித் யுசுப், தேசிய சூறா கவுண்சிலின் உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.

வடக்கு முஸ்லீம்களது மீள்குடியேற்றப் பிர்ச்சினைகள் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. மேலும் இவ்விடயம் பற்றி அரசியல் மட்டத்தினாலேயே தீா்வு காணப்படல் வேண்டும். சமுகம் சாா்பாக சகல பா.உறுப்பிணா்களும் கட்சி வேறுபாடு பாராது இவ் விடயத்தில் ஒருமித்த குரலில் நாம் செயற்படல் வேண்டும். ஜனாதிபதி, பிரதமா் மற்றும் சிவில் சமுகப் பிரநிதிகள் ,கட்சித் தலைவா்கள், சந்தித்து இவ் விடயம் பற்றி கலந்துரையாடி தெளிவுபடுத்தப்படல் வேண்டும். அமைச்சரவையில் உள்ள 5 முஸ்லீம ்கபிணட் அமைச்சா்கள் இவ் விடயத்தில் ஒருமித்து அரசியல் ரீதியாக தீா்வைப் பெற முயற்சித்தல் வேண்டும், 22 பாராளுமன்ற உறுப்பிணா்களும் இவ் விடயம் பற்றி கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு முறையிடல் வேண்டும். சந்தித்து இவ் விடயம் பற்றி தமது ஒருமித்த ஒத்துழைப்பை வழங்க சூறா கவுண்சில்் முடிபு எடுக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -