கிண்ணியாவின் கடந்த வெள்ளத்தினால் கொண்டு செல்லப்பட்ட குறிஞ்சாக்கேணிபாலம் தற்காலிகமாக இரும்புக் கம்பியினால் ஆக்கப்பட்டுள்ளது.இப்பாலத்தினூடாக நாளாந்தம் பல வாகனங்கள் என போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்கள்.
இது வரைக்கும் பாலவேலைகள் ஆரம்பிக்கப்படாமை அதனூடாக பயணிக்கும் மக்கள் அச்சத்தோடு இடிந்து விழும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த வெள்ள அனர்த்தத்தின்போது ஜனாதிபதி தேர்தல் காலமது தற்போதைய ஜனாதிபதி பாலமுடைந்த தருணத்தில் கிண்ணியா நகர சபை மைதானத்தில் கூட பேசியிருந்தார் . ஜனாதிபதியானதும் குறிஞ்சாக்கேணிப்பாலத்தைப் புணரமைத்துத் தருவதாகவும் கூறியிருந்தார் ஆனால் இது வரைக்கும் பாலவேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை .மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கிண்ணியாவில் பெயரளவில் மாத்திரம்தான் மூன்று உறுப்பினர்களும் ஒன்றுசேர்ந்தாலே இதனை முடித்திருக்கலாம். பாலம் புனரமைக்கப்படாமை போக்குவரத்தில் ஈடுபடுவோர்கள் பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர் .எனவே இவ்விடயம் தொடர்பாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கிண்ணியாவில் உள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் கேட்டுநிற்கின்றனர்
திருகோணமலை மாவட்ட கிண்ணியா பாராளுமன்ற உறுப்பினர்களே இது உங்கள் கவனத்திற்கு