S.சஜீத்-
தொழிநுட்பத்திறன் வளர்ந்து செல்லும் இக்கால கட்டத்தில் மாணவர்களின் முன்னேற்றம் இன்னும் பின் தங்கியதாகவே செல்கின்றன என்பதனை கருத்திற் கொண்டு மாணவர்களின் கல்வி அறிவு மற்றும் தொழிநுட்பத்திறன் என்பவற்றினை வளர்த்துச் செல்வதற்காக வேண்டி உருவாகிய பல்கலைக்கழக மற்றும் உயர்கல்விமானவர்கள் ஒன்றினைந்த (TEAM-Together Everyone Achieve More) பல்கலைக்கழக மற்றும் உயர்கல்விக்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி மண்ணில் இளம் விஞ்ஞானிளை உருவாக்கும் விசேட ரோபோடிக் (Robotic) முகாம் ஒன்று கடந்த (11,12.04.2017) ஆகிய இரு தினங்களாக பாடசாலை மாணவர்களை ஒன்றினைத்து காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வானது TEAM ஒன்றியத்தின் உறுப்பினராகிய எம்.எம்.எம். முபாஸ் (Information Technology University of Moratuwa) அவரது தலைமையில் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கான தொழிநுட்பம் தொடர்பாக புத்துருவாக்கம் ஊட்டும் தகவல்களை எம். பாஸில் (Lecturer, German Tech, Kilinochchi) அவர்கள் விரிவுரை நிகழ்த்தினர்.
மேலும் பிரதம அதிதியாக பொறியியளாலர் M. அப்துர் றஊப் (Eng) அவர்கள் கலந்து கொண்டதுடன் இதில் பல மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி அவர்கள் ரோபோ உருவாக்கம் மற்றும் அவற்றிக்கான புரோக்ராமிங் தொடர்பான அறிவினை கற்றுக் கொண்டு அவர்கள் பல ரோபோக்களை வடிவமைத்து செயற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.