பிறவ்ஸ்-
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் முயற்சியினால், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் சம்மாந்துறையில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIATE) 5 மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் இன்று (11) செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களால் வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஐ.எல்.எம். மாஹிர், ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன், SLIATE உயரதிகாரிகள் மாணவ, மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.