அரசியல் அமைப்பை பகுதியளவில் மறுசீரமைப்பு செய்வது தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வைக் காண பயனளிக்காது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
நீண்ட காலமாக இந்த நாட்டில் இருந்த இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்கான புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என அனைவராலும் மக்களுக்கு உறுதிமொழிவழங்கப்பட்டது. இதற்கமைய செயற்பட வேண்டும்.
ஆனால், இதனை சீர்குழைக்க சிலர் முயற்சிக்கின்றதைக் காணக்கூடியதாக உள்ளது. புதிய அரசியல் அமைப்பே சமாதானத்தை உறுதிப்படுத்தும்.
அதைவிடுத்து, அரசியல் அமைப்பை பகுதி பகுதியாக மறுசீரமைத்தால் பயனளிக்காது. புதிய தேர்தல் முறைமை, அதிகாரப்பகிர்வு அடங்கிய புதிய அரசியல் அமைப்பு அவசியமாகும்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.