திருகோணமலை மாவட்டத்தில் வரட்சியினால் 03-05-2017 திகதிவரை 96 கிராம சேவகர் பிரிவுகளில் 27646 குடும்பங்களைச்சேர்ந்த 105847 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக திருகோணமலை மாவட்ட அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.மேலும் மாவட்டத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாக குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவு காணப்படுகின்றது.குச்சவெளி செயலகப் பிரதேசத்தில் 24 கிராம சேவகப்பிரிவுகளில் 7666 குடும்பங்களைச்சேர்ந்த 27235 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முபாமைத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தற்போது பௌசர் முலம் நீர் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.