அனர்த்தங்கள் காரணமாக, 114,124 குடும்பங்களைச் சேர்ந்த 442,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 146ஆக அதிகரித்துள்ளது என, அனர்த்த முகாமைத்துவ நிலையம், இன்று (28) மதியம் அறிவித்துள்ளது.

இந்த அனர்த்தங்களின் காரணமாகக் காயமடைந்தோரின் எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது என அறிவித்துள்ள அந்நிலையம், 112 பேரை, இன்னும் காணவில்லை என்றும் அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 51 பேர் இரத்தினபுரியிலும் 43 பேர் களுத்துறையிலும் உயிரிழந்துள்ளனர். மாத்தறையில் 14 பேர், காலியில் 8 பேர், ஹம்பாந்தோட்டையில் 5 பேர், கம்பஹாவில் 3 பேர், கேகாலையில் 2 பேர் என, உயிரிழந்தோரின் எண்ணிக்கை காணப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் 71 பேர் இரத்தினபுரியிலும் 43 பேர் களுத்துறையிலும் உயிரிழந்துள்ளனர். மாத்தறையில் 14 பேர், காலியில் 8 பேர், ஹம்பாந்தோட்டையில் 5 பேர், கம்பஹாவில் 3 பேர், கேகாலையில் 2 பேர் என, உயிரிழந்தோரின் எண்ணிக்கை காணப்படுகிறது.

இந்த அனர்த்தங்கள் காரணமாக, 114,124 குடும்பங்களைச் சேர்ந்த 442,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்துள்ள அந்நிலையம், 230 வீடுகள், முழுமையாகச் சேதமடைந்துள்ளன எனவும் 1,701 வீடுகள், பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அறிவித்துள்ளது.

இந்த அனர்த்தங்கள் காரணமாக, 109,773 குடும்பங்களைச் சேர்ந்த 423,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்துள்ள அந்நிலையம், 203 வீடுகள், முழுமையாகச் சேதமடைந்துள்ளன எனவும் 1,627 வீடுகள், பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அறிவித்துள்ளது.(TM)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -