சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு இலட்சத்து ஐம்பாதாயிரம் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக சுகாதார தாபனம் உறுதியளித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார்.
இத்தேபான, கல்பான, இரத்தினபுரி, தெனியாய மொரவக்க மற்றும் கம்புறுபிட்டிய ஆகிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அங்கு இருக்கின்ற நோயாளர்களை அங்கிருந்து வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான அளவு வைத்தியர்கள் மற்றும் தாதியர்களும் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.