பாறுக் ஷிஹான்-
இலங்கை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகளை எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மியன்மார் அகதிகள் நேற்று(30) யாழ் காங்கேசன் துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட 30 மியன்மார் அகதிகள் காங்கேசன் துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இவர்களுடன் வந்த இரு இந்தியர்கள் என தெரிவிக்கப்படும் நபர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளைஇ மியன்மாரில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கிருந்து தாம் இடம்பெயர்ந்து வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்டங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.