மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் வருடாந்த'ஷம்ஸ் தினம் நிகழ்வு 2017'






பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் 'ஷம்ஸ் தினம் நிகழ்வு 2017' கடந்த ஞாயிற்றுக்கிழமை(30-04-2017)மாலை ஷம்ஸ் மத்திய கல்லூரி திறந்த வெளியரங்கில் கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் 'ஒன்றிணைவை நோக்கி' எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது.

ஷம்ஸ் பழைய மாணவர்களின் அமைப்பினால் அதனுடைய கொழும்பு மற்றும் வெளிநாட்டு கிளைகள்,அனைத்து பழைய மாணவர்கள் அமைப்புக்களுடன் பாடசாலைச் சமுகத்தின் அனுசரணையுடன் இவ்வருடமும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதே போன்று இவ்வருட ஷம்ஸ் தின நிகழ்வானதும் பாடசாலையின் கல்விசார் புறக்கீர்த்திய செயற்பாடுகளை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஷம்ஸ் பழைய மாணவர்களின் அர்ப்ப்பணிப்பினை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

ஷம்ஸ் தினம் - 2017 நிகழ்வினை முன்னிட்டு இம்முறை சுகாதார முகாம் ஒன்றினை மருத்துவ மற்றும் சுகாதாரத்துறைகளில் கடமையாற்றுகின்ற பாடசாலையின் பழைய மாணவர்களால் கடந்த 29.04.2017 சனிக்கிழமை காலை 08.00 மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணி வரை மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.

விஷேட கௌரவிப்பாக இப்பாடசாலையின் பழைய மாணவர்களான மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப்,இலங்கை வானொலி பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் ஆகியோருக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

இவ்விழாவில் கல்விசார் மற்றும் புறக்கீர்த்திய செயற்பாடுகளில் தமது திறமைகளை வெளிக்காட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்த நூற்றுக்கும் அதிகமான தனிப்பட்ட மற்றும் மாணவர் குழுக்களுக்கும் பரிசில்களும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.பழைய மணவர்களான ஆசிரியர் எஸ்.எல்.அஜ்மல்கான்,மென்பொருள் பொறியிலாளர் சுகைல் ஜமால்தீன் ஆகியோர் உள்ளீட்ட பலர் மாணவர்களுக்கு சாண்றிதழ்களையும்,நினைவுச்சின்னங்களையும் கௌரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -