2020இல் ஆட்சி மாற்றும், மலையக மக்களின் வாழ்க்கை சிறக்கும் - அமைச்சர் தயாசிறி

க.கிஷாந்தன்-
2020இல் ஆட்சி மாற்றம் உருவாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸை நம்பி வாழும் மலையக மக்களுக்கு வாழ்கையில் சுபீட்சம் ஏற்படும் என விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

இ.தொ.கா வின் மேதினம் கினிகத்தேனை நகரில் பிரதான பஸ்தரிப்பிடத்திற்கு அருகில் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாதவது,

ஜனாதிபதியின் விசேட பணிப்பின் கீழ் இ.தொ.காவின் மேதின விழாவில் வருகை தந்து எம்மை வரவேற்றதில் நாம் மற்றற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் பேரணியில் நடந்து வந்து இம் மேதின கூட்டத்தில் கலந்து கொண்ட பெறுமையை அடைகின்றோம்.

இலட்சத்திற்கு அதிகமான மக்கள் தொண்டர்களாக இ.தொ.காவுக்கு ஆதரவாக இருப்பதை எண்ணி பெருமைப்படுகின்றோம். அமரர். தொண்டமானின் காலத்தில் ஒரு ரூபாய் சம்பள உயர்வு முதல் மலையக மக்களுக்கு வாக்குரிமையை பெறுதவற்காக இரவு பகலாக பாடுபட்டவர் தொண்டமான் அவர்கள்.

இன்று 10 வருடங்களுக்கு மேலாக மலையக மக்களின் தேவையை ஒரு சில்லறை காசுக்கு கூட அடிப்பனியாதும், விலைபோகாத நிலையில் ஆறுமகன் தொண்டமான் மக்களின் சேவையை முன்னெடுக்கின்றார்.

எதிர்காலத்தில் மலையக மக்கள் சுபீட்சம் பெறுவதற்கு இந்நாட்டின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆதரித்து செயல்பட இ.தொ.காவும் துணை நிற்கின்றது.

ஆகையால் மலையக மக்கள் கஷ்டப்பட்டேனும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை ஆதரித்து எதிர்காலத்தில் சுபீட்சமான வாழ்க்கையை வாழ வழிசமைக்க வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -