தென்னாப்பிரிக்காவின் ப்ரீடோரியா நகரில் வாடகை கார் சாரதியாக பணியாற்றி வந்த 23 வயதான ஓர்டியல் என்ற இளைஞரை, 3 பெண்கள் கடத்தி அவருக்கு போதை மருந்துகள் கொடுத்து தொடர்ந்து மூன்று நாட்களாக பலமுறை பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்துள்ளதாக தென்னாபிரிக்க ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்துள்ளதாவது, கடந்த வெள்ளிக்கிழமை மயக்க மருந்து மூலம் கடத்திச் செல்லப்பட்ட ஓர்டியல், மயக்கத்தில் இருந்து தெளிந்த நிலையில், மூன்று பெண்களால் 3 நாட்கள் பலமுறை பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மூன்று பெண்களையும் தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
அத்தோடு ஆண்டுதோறும் தென்னாப்பிரிக்காவில் மாத்திரம் சுமார் 5 இலட்சம் பேர் வரையில், பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(வீ)