முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 24வது சிரார்த்த தின நிகழ்வு










ஏ.எஸ்.எம்.ஜாவித்-

றைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 24வது சிரார்த்த தின நிகழ்வு இன்று காலை (01) கொழும்பு 12, ஹல்ஸ்ரப் உயர் நீதி மன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள அவரது உருச்சிலைக்கருகில் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் வின்ரமசிங்ஹ, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ரி.எம்.சுவாமிநாதன், விஜயகலா மகேஸ்வரன், கயந்த கருணாதிலக உள்ளிட்ட பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மேல்மாகாண ஆளுநர், முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஹேமா பிரேமதாஸ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள் எனப் பெருந்திரலானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் அமரர் பிரேமதாஸவின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர்,திருமதி பிரேமதாஸ, சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர். இதன்போது கொழும்பு மாவட்டத்தில் வீடுகளில்லாத வறிய குடும்பங்களுக்கு வீட்டு உறுதிப்பத்திரங்கள் பிரதமர், அமைச்சர் சஜித் பிரேமதாஸா ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -