அஷ்ரப் ஏ சமத்-
முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவின் 24வது நினைவு தின நிகழ்வுகள் மே 1ஆம் திகதி கொழும்பு புதுக்கடையில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் திருமதி ஹேமா பிரேமதாசா முன்னிலையில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகளில் வாழும் கொழும்பு வாழ் 1500 குடும்பங்களுக்கு வீட்டுரிமைப்பத்திரமும் 200 வறிய குடும்பங்களுக்கு வீட்டு உதவிக் கடனும் கடந்த ஆட்சியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அரசியலால் பழிவாங்கப்பட்டவா்களுக்கு பதவியுவா்வு மற்றும் உதவித் தொகைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.