சாய்ந்தமருது மக்தபுல் ஹுதாவின் 2 ஆம் ஆண்டு நிறைவும் பரிசளிப்பும் விழாவும்!

எம்.வை.அமீர்- 
சாய்ந்தமருதில் முதலாவது உருவாக்கப்பட்டு தற்போது 95 மாணவர்களுக்கு மேல் மார்க்கக் கல்வி பயின்று வரும் மக்தபுல் ஹுதாவின் 2 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலின் தலைவர் ஏ.எல்.எம்.றசீட் (புர்க்கான்ஸ்) தலைமையில் 2017-05-06 ஆம் திகதி சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அஷ்செய்க் ஆர்.எல்.நிழாமுத்தீன் (நூரி) கிழக்குமாகாண தலைமை மக்தப் மேற்பார்வையாளர் அவர்கள கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக அஷ்செய்க் ஏ.வி.பர்ஹான் (தப்லீகி) அம்பாறை 3 ஆம் பிரிவு மக்தப் மேற்பார்வையாளர் அவர்களும் கலந்து கொண்டனர். பெற்றோர்களின் சார்பில் நிகழ்வை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதிப் பதிவாளர் எம்.ஐ.நௌபர் நெறிப்படுத்தினார்.

மாணவர்களது பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறிய அதேவேளை நிகழ்வுக்கு தலைமை வகித்த மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலின் தலைவர் ஏ.எல்.எம்.றசீட் (புர்க்கான்ஸ்) அவர்கள் தனது உரையின்போது மார்க்கக் கல்வியின் ஆரம்ப கட்டமான மக்தப் கல்வியின் அவசியம் பற்றியும் சாய்ந்தமருதில் மக்தப் கல்வி நிலையங்களை நிறுவுவது தொடர்பில் தான் சாய்ந்தமருது ஜும்மாஹ் பள்ளி மரைக்காயர் சபையில் முன்வைத்த கோரிக்கை தொடர்பிலும் விளக்கமளித்தார்.

அவர் ஆற்றிய உரையின் முழு ஒலி வடிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. http://vocaroo.com/i/s1VRKu2xlvrb

தங்களது செல்வங்களின் மார்க்கம் தொடர்பான நிகழ்வுகளைக் கண்டுகளிப்பதற்காக பெரும் திரளான பெற்றோரும் பன்குகொண்டிருன்தது குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -