அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை. பக்மீகம பகுதியில் கரடியின் தாக்குதல் படுகாயமடைந்த 30 வயதுடைய இளைஞன் இன்று (08) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோமரங்கடவல. பக்மீகம பகுதியைச்சேர்ந்த சரத் ஏக்கநாயக்க (30வயது) எனவும் தெரியவருகின்றது.
திங்கக்கிழமையான இன்று காலை மயிலவெவ காட்டுப்பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக மூன்று பேர் சென்ற வேளை வீழ்ந்து கிடந்த மரத்திற்கருகில் மறைந்திருந்து முன்னால் பயணித்தவரை தாக்கியதாகவும் தெரியவருகின்றது.
குறித்த இளைஞனின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் கண்ணொன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.