அனைத்து முதலமைச்சர்களின் 33 ஆவது மாநாடு நேற்று வட மத்திய மாகாணத்தில் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டும் அதில் பங்கேற்றார், வட மத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக பங்கேற்றார்.
இதன் போது கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதன் போது முன்வைத்ததுடன் ஜனாதிபதியுடன் பிரத்தியேகமாக சந்திப்பில் பட்டதாரிகள் மற்றும் இறக்காமம் சிலை விவகாரம் தொடர்பிலும் எடுத்துரைத்தமை குறிப்பிடத்தககது.