திருகோணமலை ரொட்டறி கழக 38 வது “தொடக்க ஆண்டு”(Charter Day) விழா..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை ரொட்டறி கழக 38 வது “தொடக்க ஆண்டு” (Charter Day) விழா, ரொட்டறி இல்லம், டைக் வீதி, திருகோணமலையில் இன்று (07) நடைபெற்றது. திரு. மகேந்திரராஜா பிரதி பிரதம செயலாளர் - திட்டமிடல் - கிழக்கு மாகாணம்அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் திருதிரு ச சிவசங்கர் ரோட்டரி கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார். எங்களிடம் இருந்து மரணம் ஈய்திய முன்னால் ரோட்டரி அங்கத்தவர்கள் நினைவு கூறப்பட்டனர். திருகோணமலை ரொட்டறி கழகத்தின் தொடக்க செயலாளர் - தவசிலிங்கம் திருகோணமலை ரொட்டறி கழக வரலாறு பற்றி எடுத்துரைத்தார்.

ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியை சேர்ந்த 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரிட்சையில் முதல் மாணவியான செல்வி யசிகா ராஜு கௌரவிக்கப்படடர். பிரதம விருந்தினர் திரு. மகேந்திரராஜா அவர்கள் தமது உரையில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிடல் எவ்வாறு நடைபெறுகிறது என்று விபரித்தார். அடுத்த வருட தலைவர் திரு நீல் போர்ஹம் (Neil Borhan) நன்றி உரை நிகழ்தினார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -