ஜோசெப் பரராஜசிங்கம் படுகொலை : தேடப்பட்டு வந்தவர்களில் 5வது நபர் கைது

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூவரில் ஒருவர், புதன்கிழமை பிற்பகல் (24.05.2017) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலொன்னறுவை - வெலிக்கந்தையைச் சேர்ந்த வினோத் என்றழைக்கப்படும் மதுசங்க (வயது 30) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில், புதன்கிழமை ஆஜர்படுத்திய போது, சந்தேக நபரை ஜூன் மாதம் 7ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா Magistrate and Additional District Judge Manikkavasagar Ganesharajah உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள 5ஆவது சந்தேக நபரான குலத்துங்க, இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கவுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட நீதவான், சிறைச்சாலை உத்தியோகத்தரூடாக எதிர்வரும் ஜுன் மாதம் 5ஆம் திகதி தன்னுடைய வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

த.தே.கூ மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா என்றழைக்கப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம். கலீல் ஆகியோர் கைது செய்யப்பட்டு கடந்த ஓன்றரை வருடங்களுக்கு மேலாக நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த படுகொலை தொடர்பாக 7 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வழக்கு, எதிர்வரும் ஜுன் மாதம் 7ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -