தெஹியோவிட்ட பகுதியில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக தெஹியோவிட்ட நகரம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. சுமார் 8 அடி உயரம் வரை நீர் நிரம்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை தெஹியோவிட்ட தேசிய பாடசாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் நிரம்பியுள்ளதுடன், ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியிலும் வெள்ளநீர் நிரம்பியுள்ளது.
இதனால் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் பஸ்கள் மாற்றுவழிகளை பயன்படுத்திவருவதுடன், சில பஸ்கள் மீண்டும் ஹட்டன் நோக்கி புறப்பட்டுச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சிறிய வாகனங்கள் தெஹியோவிட்ட பகுதியிலுள்ள மாற்றுவழியொன்றினூடாக பயணிப்பதாக அறியமுடிகிறது
kesari