கிழக்கு முதலமைச்சரின் மேதினச் செய்தி

தொழிலாளர்கள் இன்று தமது உரிமைக்காய் போராடுகையில் கிழக்கில் மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் வாழ்க்கையோடு போராடி வருகின்றனர்,

கிழக்கில் தனியார் முதலீடுகளோ பாரிய தொழிற்துறைகளோ இன்மையினாலேயே வேலையில்லாதோர் வீதம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பலர் வெளிநாடுகளுக்கு தொழில் தேடிச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் எமது நாட்டின் மனித வளங்களை நாம் உரிய வகையில் பயன்படுத்தத் தவறியுள்ளோம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

நாட்டின் வளங்கள் சமமாக பிரிக்கப்படாமையும் ஒரு சில இடங்களிற்கு மாத்திரம் வளங்கள் குவிக்கப்படுகின்றமையே கிழக்கின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு பிரதான காரணமாய் அமைந்துள்ளது.

கிழக்கில் புதிய தொழிற்துறைகள் அபிவிருத்தியடையாமையினாலேயே வேலையில்லாப் பட்டதாரிகளும் இன்று வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதனாலேயே மாகாணங்களுக்கென அதிகாரம் மிக்க தனி முதலீட்டு சபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை நாம் அடிக்கடி கூறி வருகின்றோம்.

இதன் மூலம் எமக்குரிய முதலீடுகளைப் பெற்று நாமே தொழிற்துறைகளை உருவாக்க ஏதுவாக அமையும் என்பதுடன் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கிழக்கின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்

இன்று ஏராளமான முதலீட்டாளர்கள் கிழக்கில் முதலீடு செய்ய தயாராகவே உள்ளனர்.அவர்கள் மத்திய முதலீட்டு சபைக்கு சென்று அங்குள்ள படிமுறைகளால் இடைநடுவிலேயே சென்று விடுகின்றனர்.

அது மாத்திரமன்றி எமது மாகாணத்துக்கு தேவையற்ற எதனோல் எரிசாராய உற்பத்திசாலைகள் எமது அனுமதியின்றி எமது மாகாணத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.

அவற்றை நாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை.இவ்வாறான தொழிற்துறைகள் மூலம் எமது எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுவதுடன் இவ்வாறான முதலீடுகள் எமக்கு தேவையற்றது.அதனாலேயே மாகாணங்களுக்கு தனி முதலீட்டு சபைகளை கோரி நிற்கின்றோம்.

ஆகவே யுத்தம் மற்றும் சுனாமி போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கிற்கு முக்கியத்துவமளித்து நாட்டின் வளப்பங்கீட்டில் கிழக்கிற்கு தனிச் சலுகை வழங்கப் பட வேண்டும் என்பதுடன் பாரிய பயனுள்ள முதலீடுகள் கிழக்கிற்கு வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்

அத்துடன் தொழிலார்களின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதற்காய் மே தினத்தில் குரல் எழுப்புவதைப் போல் கிழக்கு மக்கள் தொழில் வாய்ப்புக்களை கோரி தமது தொழில் உரிமைக்காய் எழுப்பும் குரலுக்கும் தனியிடம் கொடுத்து அவற்றுக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -