எம்.வை.அமீர்-
சாய்ந்தமருது விளையாட்டு மைதானத்தை அபிவிருத்திசெய்வதற்காக அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பால் விளையாட்டுத்துறைப் பிரதி அமைச்சர் ஹரீஸுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
சாய்ந்தமருது சன்பிளவர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் எஸ்.பி.எல்.2017 எனும் பெயரில், பிராந்தியத்தின் 24பிரபல்யம் வாய்ந்த விளையாட்டுக்கழகங்களை தெரிவுசெய்து நடாத்தும் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நாளான 2017-04-30 திகதியன்று சாய்ந்தமருது பொலிவோரியன் விளையாட்டு மைதானத்தில், சன்பிளவர் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பொறியியலாளர் கமால் நிஷாத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே கலாநிதி ஜெமீல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய அரசியலில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரை இந்தமண் கொண்டுள்ள போதிலும் எங்களுக்கு என சிறந்த விளையாட்டு மைதானம் இல்லாதது துரதிஷ்ட்டமாகும். கரையோர பிராந்தியத்தில் 10 ஏக்கர்களைக் கொண்ட நிலப்பரப்பை சாய்ந்தமருது பொலிவோரியன் விளையாட்டு மைதானம் கொண்டுள்ளது என்பது இப்பிராந்திய விளையாட்டு வீரர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். கடந்த காலங்களில் குறித்த விளையாட்டுமைதான அபிவிருத்திக்கு அரசியல் வேறுபாடின்றி செயட்பட்டதுபோல் எதிர்காலத்திலும் செயற்பட தயாராக இருப்பதாகவும் இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களும் விளயாடக்கூடியதாக இந்த மைதானம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் என்றும் கேட்டுக்கொண்டார்.
(கலாநிதி ஜெமீல் ஆற்றிய உரையின் ஒலிவடிவம் இணைக்கப்பட்டுள்ளது) Click...
நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா ஆகியோரும் கலந்துகொண்டனர். ஆரம்ப நிகழ்வின்போது மூத்த விளையாட்டுவீரர்கள் கெளரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.