இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பலமாக அறிவுப்பலமே காணப்படுகின்றது.. மீராவோடையில் சாட்டோ மன்சூர்


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

ந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பலம் ஆயுத பலமா.? அல்லது ஆட் பலமா.? எண்ரு சிந்திப்போமானல் எதுவுமே இந்த நூற்றாண்டினுடைய பலமாக எடுத்துக்கொள்ள முடியாது. மாறாக அறிவுப்பலத்தினையே இந்த நூற்றாண்டினுடைய மிகச்சிறந்த பலமாக கருத்தில் எடுத்து செயற்பட வேண்டிய தேவைப்பாட்டில் நாம் எல்லோரும் இருந்து கொண்டிருக்கின்றோம். அதனாலே மேற்குலக நாடுகளும் அதிலும் முக்கிய இஸ்ரேலிய சியோனிசமும் அறிவுபலத்தினை பயன்படுத்தி முஸ்லிம் உம்மாவினை ஒழித்துக்கட்டுவதற்கான ஆயூதமாக பயண்படுத்திவருகின்றனர் என சமூக ஆர்வலரும் முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்குடா தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சாட்டோ.வை.எல்.மன்சூர் தெரிவித்தார்.

கடந்த 19.05. 2017ம் திகதி வெள்ளிக்கிழமை மீராவோடை அல்-ஹிதாயா பாடசாலை மைதானத்தில் கல்குடாவில் சமூக கல்வி கலாச்சார விடயங்களில் முக்கிய பங்காற்றிவருகின்ற அல்-அக்ரம் விளையாட்டு கழகத்தினால் கடந்த மார்ச் மாதமளவில் நடாத்தப்பட்ட கல்குடாத்தொகுதி முஸ்லிம் பிரதேச முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கான வர்ணந்தீட்டும் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கும் நிகழ்விலேயே சாட்டோ வை.எல்.மன்சூர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெருந்திரலான பெற்ரோர்களின் வருகையுடனும், பிரதேசத்தினை மையப்படுத்தி ஒன்பது முன்பள்ளி பாடசாலை மாணவர்களை கெளரவிக்கும் குறித்த வைபவத்தில் பிரதம அதீதியாக சாட்டோ வை.எல்.மன்சூர் கலந்து கொண்டதுடன், பிரதேசத்தின் கல்விமான்கள், சமூக சேவையாளர்கள், மற்றும் அல்-அக்றம் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் றிஸ்வி ஆகியோரும் அதிதீகளாக கலந்து சிறப்பித்தனர்.

.இளம் வயதில் சிறார்களை கல்வியின்பால் ஊக்கப்படுத்தவும், வர்ணந்தீட்டுதல் போட்டிகளை நடாத்துவதன் மூலம் நினைவாற்றல், வரையும் திறன்களை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலுமே இவ்வாறான வர்ணந்தீட்டும் போட்டிகளைத் தேர்வு செய்து மீராவோடை அல் அக்ரம் விளையாட்டுக்கழகம் நடாத்தி வருகின்றது. மேலும் குறித்த நிகழ்வோடு மன்சூரின் விரிவான உரையின் காணொளியும் எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -