''மரணத்தை வழங்கும் குண்டுக்குத் 'தாய்க் குண்டு' எனப் பெயர் வைத்துள்ளதை நான் கேவலமாக உணர்கின்றேன்!'' என்று போப் ஃபிரான்சிஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க ராணுவம் இதுவரையான போர்களில் பயன்படுத்திய குண்டுகளிலேயே மிகப்பெரிய வெடிகுண்டுக்கு, 'அனைத்துக் குண்டுகளுக்கும் மேலான தாய்' என்று பெயர் வைத்திருந்தமை பற்றி விமர்சனம் செய்கையிலேயே போப் ஃபிரான்சிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம், ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ எஸ் தீவிரவாத நிலைகளின் மீது சுமார் 10 ,000 கிலோ எடை கொண்ட 'தாய்க் குண்டை' அமெரிக்கா வீசியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
''உயிரைத் தருபவள் தாய். ஆனால், இந்தக் குண்டு மரணத்தை மட்டுமே தருகிறது. இந்தப் போராயுதத்தை நாம் தாய் என்று அழைக்கிறோம். இந்த உலகில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?'' என்று போப் ஃபிரான்சிஸ் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.