நாட்டில் இனமதவாதச் செயற்பாடுகள் கூர்மையடைந்துவருவது ஆரோக்கியமானதல்ல!

அம்பாரை மாவட்ட சர்வ சமய சம்மேளனம் அறிக்கை!
காரைதீவு நிருபர் சகா-
ம்பாரை மாவட்ட சர்வசமய சம்மேளனம் கடந்த ஒரு தசாப்தமாக இனங்களுக்கும் சமயங்களுக்குமிடையில் சமாதானத்தையும் சகவாழ்வையும் மேம்படுத்துவதற்காக பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பல வெற்றிகரமான அடைவுகளைக் பெற்றுள்ள நிலையில் இம்மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் நாட்டில் சமகாலத்தில் பொதுவாகவும் சமய தீவிரவாதச் செயல்கள் தலை தூக்கி வருவது கவலையளிக்கின்றது.

இவ்வாறு சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் செயலாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

30 வருடகால யுத்தத்தின் பின் நாட்டில் சமாதானத்தை மக்கள் ஆவலோடு வரவேற்று வாழ்ந்து கொண்டிருந்த வேளை சமய தீவிர வாதிகளின் செயற்பாடுகள் காரணமாக பல அழிவுகளும் அவலங்களும் ஏற்பட்டன. அதே போன்று தற்போதைய அரசு நாட்டில் சமாதானம், சக வாழ்வு,மனித உரிமைகள் போன்றவற்றிர்க்கு முன்னுரிமையளித்து வரும் வேளையில் மீண்டும் சமய தீவிர வாதம் தலை தூக்கியுள்ளது.

சமயத் தலைவர்களும் மக்களும் தத்தமது சமயங்கள் கூறும் நற்பண்புகளைப் பேணுவதற்குப் பதிலாக ஏனைய சமயங்களை விமர்சிப்பதிலும் ஏனைய இன மக்களை இம்சைப்படுத்துவதிலும் அக்கறை காட்டுவது சமயத்தை தமது இதயத்தில் வைத்திருப்பதற்குப் பதிலாக தலை மேல் சுமந்து திரிவதற்கு ஒப்பாகும். இதனை அரசும் நாட்டின் சமயத் தலைவர்களும் புத்திஜீவிகளும் வெளிப்படையாகக் கண்டித்து உரிய நடவடிக்கைளில் தீவிரமாக இறங்க வேண்டும். மாறாக, இந்நிலை தொடருமாயின் எமது நாடு சர்வதேசத்தில் இழிவாக நோக்கப்படும்.

அதே வேளை எல்லா இன மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற உணர்வுடன் நாட்டின் முனனேற்றத்திலும் நலத்திலும் அக்கறையுள்ளவர்களாகவும் தத்தமது சமயங்களுக்குள் ஒற்றுமையாகவும் தமது சமயங்கள் கூறும் நல் விழுமியங்கள் வழியில் தமது வாழ்வொழுங்கை வகுக்க வேண்டும். ஏனைய சமயச் சடங்குகளையும் மக்களின் மனித உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்து பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் வாழப் பழக வேண்டும். 

சமயங்களின் அதியுயர்பீடங்கள் பிழையாகச் செயற்படும் சமயக்குருமாரையும் ஏனைய சமயச் செயற்பாட்டாளர்களையும் கண்டித்துத் திருத்த வேண்டும் எனவும் இச் சம்மேளனம் வேண்டுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -