அஸீம் கிலாப்தீன்
நிதி அமைச்சராக இதுவரை காலமும் செயற்பட்டு வந்த ரவி கருணாநாயக்க, நிதி அமைச்சில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றின் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார். தனது பதவிக் காலத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்காக தன்னுடன் இணைந்து செயற்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அவர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
சுமார் இரண்டரை வருடங்கள் அந்த பதவியிலிருந்த ரவி கருணாநாயக்க, நாட்டின் அபிவிருத்திக்காக பல்வேறு வகையில் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை காலமும் நிதி அமைச்சராக செயற்பட்டு வந்த ரவி கருணாநாயக்க, இன்று முதல் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை காலமும் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டு வந்த மங்கள சமரவீர, இன்று முதல் நிதி அமைச்சராக செயற்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.